திருத்தலம் தொழுவோம்

 


மதுரை உண்மையில்கி மு ௮௦௦௦ வருடங்களுக்கு மூன்னதான

தொன்மையான வரலாறு கொண்டது. தற்போது கி.மு.3200வருடங்களுக்கு முன்

தொன்மையான ஆதாரங்கள்‌, நமக்கு கிடைத்துள்ளன.

தலைச்சங்கம்‌,

இடைச்சங்கம்‌,

கடைச்சங்கம்‌” என்று

முச்சங்கங்கள்அமைக்கப்பட்டு

முத்தமிழை வளர்த்த மாநகரம்மதுரை.

இதில்மிக சிறப்பு எதுவென்றால்‌.

தலை சங்கத்திற்கான நிறுவனராக

மாமுனி அகத்தியர்இருந்திருக்கிறார்‌.

சங்கத்தின்தலைவராக, பாட்டுடைத்

தலைவன்சிவபெருமான்தலைவராக

அமர்ந்து தமிழை வளர்த்திருக்கிறார்‌.

மதுரை கூடல்நகரம்என்று

அழைப்பதற்கு, திருவிளையாடற்

புராணத்தில்சான்று இருக்கிறது.

அபிடேக பாண்டியன்‌. சித்ரா

பெளர்ணமி அன்று சோம சுந்தரரை

வழிபடுவது வழக்கமாக இருந்தது. அதே

நாளில்இந்திரனும்வழிபாடு செய்ய

வந்தான்‌. மன்னர்பாண்டியன்வழிபாடு

முடிக்கும்வரை காத்திருந்து பின்னர்

வழிபாடு செய்து திரும்பினார்‌.

இந்திரனுக்கு சற்று

வருத்தம்‌. இறைவனை

வழிபடுவதற்கு

காத்திருக்க

வேண்டியதாயிற்று என்று

இந்திரனுக்கு சற்று

வருத்தம்‌.

இந்நிலையை

வருணன்தனக்கு

சாதகமாக

பயன்படுத்திக்

கொண்டு இந்திரனை

தூண்டி விடுகிறான்‌.

இதற்கு முன்னோட்டமாக சோமசுந்தரரின்

வரலாற்றை பற்றியும்‌, அவருடைய

மகிமையையும்கூறுமாறு இந்திரடனிடம்

கேட்கிறான்‌.

 

இந்திரன்‌. தனது பழியை சோமசுந்தரர்

தான்நீக்கினார்என்பதையும்‌. ஐராவதம்

என்ற வெள்ளை யானையின்சாபமும்‌,

சோம சுந்தரரின்அருளால்நீங்கிய

வரலாற்றைக்கூறி, பிறவி பெருங்கடனை

அழிக்கவல்ல கடவுள்‌, உடல்மற்றும்

உள்ளத்தில்ஏற்பட்ட நோயையும்

எளிதாக தீர்த்து விடுவார்சோம சுந்தரர்

என்பதை கூறி, நீ வேண்டுமென்றால்

பெருமானின்திருவிளையாட்டை

சோதித்துப்பார்என கூறினான்

இந்திரன்‌.

 

வாய்ப்பை எதிர்பார்த்திருந்த வருணன்‌.

தன்னுடைய ஆணவத்தினால்சிவனையே

சோதிக்க எண்ணினான்‌.

வருணன்‌ கடல்‌ தேவதையை

அழைத்து, மதுரையை அழிக்க

கட்டளையிட்டு ஏவினான்‌.


கடல்‌ பொங்கி வர. மன்னன்‌

பாண்டியன்‌ மதுரையை காப்பாற்ற

இறைவனிடம்‌ பிரார்த்தித்தார்‌.


திரிசடை பெருமானான

சிவபெருமான்‌ தன்‌ சடையில்‌, இருந்த

நான்மேகங்களை அனுப்பி அக்கடல்‌

நீரை வற்றுமாறு பணித்தான்‌. மதுரையை

அழிக்க பொங்கி வந்த கடல்‌

சோமசுந்தரர்‌ அருளால்‌ வற்றியது.


திரிசடை நாதன்‌ அனுப்பிய அந்த

நான்கு மேகங்கள்‌ தான்‌ நான்‌ மாட

கூடல்‌ ஆனது.பொங்கிவரும்‌ கடலை

சிவபெருமானின்‌ கருணை மழை நான்கு

மேகங்களாக தாங்கிப்பிடித்து

மதுரையம்பதியை காப்பாற்றியது.


அன்றிலிருந்து மதுரை மாநகரம்‌

கூடல்‌ மாநகர்‌ ஆனது. இறைவனே

வடிவமைத்த மாநகரம்‌ மதுரை !


மதுரை மாநகரை வடிவமைத்தது

இறைவனும்‌ அவருடன்‌ இருந்த

மாமுனிகளும்‌ என்பது வியப்பான

உண்மை! மதுரை கூடல்‌ நகரம்‌

என்பதும்‌ தூங்காநகரம்‌ என்பதும்‌

அனைவரும்‌ அறிந்தது. ஆனால்‌ மதுரை

அது ஒரு “ஜோதிட நகரம்‌” என்பது

யாரும்‌ அறியாத உண்மை.


மதுரையின்‌ வீதிகள்‌ பெயரை தமிழ்‌

மாதங்களாக இறைவனும்‌ மாமுனிகளும்‌

சேர்ந்து அமைத்தனர்‌.


12 தமிழ்‌ மாதங்களில்‌ குறிப்பாக,

“ஆடி, சித்திரை, ஆவணி, மாசி” பெயரில்‌


அமைத்ததும்‌, இறுதியில்‌ “வெளி வீதி”

என்று அமைத்திருப்பதின்‌ காரணத்தை

அறிந்தால்‌ உடலெல்லாம்‌

மெய்சிலிர்க்கிறது.


மதுரையம்பதி ஆட்சி செய்ய

அன்னை மீனாட்சியை அழைத்தார்‌

இறைவன்‌. பன்னிரு ராசிகளில்‌,

மிகச்சிறந்த மோட்ச வீடான கடகத்தை,

எல்லோருக்கும்‌ சுபத்தன்மையை வாரி

வழங்குகின்ற குரு உச்சம்‌ ஆகும்‌

கடகத்தை, இவ்‌ உலகில்‌ வாழுகின்ற

உயிர்கள்‌ எல்லாம்‌ நீரில்‌ தான்‌

தோன்றின என்பதை பறைசாற்றும்‌

முதல்‌ நீர்‌ ராசியான கடகத்தை. ராசி

மண்டலத்தில்‌ 6 பெண்‌ ராசிகள்‌

இருந்தாலும்‌ தாயின்‌ கருவறையாக

இருக்கின்ற பெண்‌ ராசியான. கடகத்தில்‌

அமர்ந்து தமிழ்‌ கூறும்‌ நல்‌ உலகத்தை

ஆட்சி செய்யுமாறு அன்னை

மீனாட்சியை வேண்டினார்‌ இறைவன்‌.


அன்னை மீனாட்சி இறைவனிடம்‌ ஒரு

வரம்‌ கேட்டாள்‌, நீங்கள்‌ பணித்தவாறு

மதுரையில்‌ அமர்ந்து தமிழ்‌ கூறும்‌ நல்‌

உலகத்தை ஆட்சி செய்கிறேன்‌.


சூரிய தேவனாக இருந்து, ண பலகப்ப

உலகத்திற்கு ஒளி கொடுத்து இ டட பட்‌

காத்துக்‌ கொண்டிருக்கின்ற வடக்கு எத்இரை எ.

தாங்கள்‌, வருடத்திற்கு 8181 81% உத

ஒருமுறை கடகத்தில்‌ அமரும்‌ 51$| 3 ம்‌ 5 8 ்‌

மாதமான ஆடி மாதத்தை நான்‌ $4$| $15 [8 15 1

அமர்ந்திருக்கக்‌ கூடிய ஆடி பத ட கப நற்கு அடில. பி ்‌ ந

வீதியாக அமைக்க வேண்டும்‌ வழ்க எத்தை எது

என்று என்று கேட்டுக்‌ கவன

கொண்டாள்‌.


நல்லம்‌ தோறும்‌ கோம்‌ ஒதற்குமா௫ு வத.


 


இறைவன்‌ அகமகிழ்ந்தார்‌.

சூழ்ந்திருக்கும்‌ மாமுனிகளும்‌

அன்னை மீனாட்சி வாழ்க!

சுந்தரேஸ்வரர்‌ வாழ்க! என்று ஆனந்த

கூத்தாடினர்‌.


அன்னை மீனாட்சி, “சற்று

பொறுங்கள்‌. இன்னும்‌ எனக்கு வரங்கள்‌

தேவை இருக்கிறது” என தொடர்ந்தார்‌.


இறைவனின்‌ திருச்‌ சடையிலிருந்து

நான்கு வேதங்கள்‌ நான்கு மாடங்களாக

இருந்து மதுரையை காப்பாற்றியது.

அதை நினைவுபடுத்தும்‌ பொருட்டு சிவ

அம்சமாக திகழ்கின்ற வலிமை

பெறுகின்ற மாதங்கள்‌ அடுத்த அடுத்த

வீதிகள்‌ ஆக அமைக்க வேண்டும்‌ என்று

இறைவனிடம்‌ கோரினாள்‌ அன்னை

மீனாட்சி.


நான்‌ அமர்ந்திருக்கக்‌ கூடிய ஆடி

வீதிக்கு, அடுத்த வீதியாக சூரியன்‌

உச்சமாகும்‌ ராசியான மேஷத்தில்‌

தாங்கள்‌ அமரும்‌ சித்திரை மாதத்தை

குறிக்கும்‌ வகையில்‌. சித்திரை வீதியாக

அமைக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌

கொண்டாள்‌.


மேலும்‌. சித்திரை மாதத்தில்‌

வருகின்ற சித்திரா பெளர்ணமி.

நன்னாளை ஒட்டி, மதுரையம்பதி

சித்திரை திருவிழா என்று மிகப்பெரிய

திருவிழாவாக நடத்தி, இறைவனின்‌

திருவிளையாடல்களை மக்களுக்கு

எடுத்துரைக்க வேண்டும்‌ என்று

கோரிக்கை வைக்கிறாள்‌.


“இறைவன்‌, ஆகட்டும்‌ தேவி !

அடுத்த வரத்தை நீ கேட்கலாம்‌”

என்கிறார்‌. அன்னை மீனாட்சி

தொடர்கிறாள்‌. அடுத்து தாங்கள்‌ ஆட்சி

செய்யும்‌ சிம்ம ராசியில்‌ வந்து

அமரக்கூடிய மாதத்தை ஆவணி

வீதியாக அமைக்கவேண்டும்‌ என்று

கூறுகிறாள்‌.


அகத்திய மாமுனி அன்னையின்‌

திருவிளையாடல்களை எண்ணி

மகிழ்ந்து போகிறார்‌.


அர்த்தமுள்ள இந்த வீதிகளை

அமைப்பதின்‌ மூலம்‌ மகேசனின்‌

பெருமை உலகம்‌ முழுவதும்‌ பரவி

இருக்கிறது என்பதை உணர்கிறார்‌.

அடுத்த வரம்‌ என்ன தேவி என்று

சொக்கீஸ்வரர்‌ வினவுகிறார்‌. தேவி

இறைவனை கைகூப்பி “மகா தேவரை


வழிபடும்‌ மகா சிவராத்திரியை

கொண்ட, மாசி மாதத்தை போற்றும்‌

விதமாக அடுத்த வீதியை “மாசி வீதி”

என அழைக்க வேண்டும்‌ என்று

கோருகிறாள்‌.

 மாமுனிகள்‌ அனைவரும்‌ அன்னை

மீனாட்சியின்‌ அருட்‌ பொதிந்த

கோரிக்கைகளை கேட்டு, கைக்கூப்பி

தொழுகிறார்கள்‌. அகத்திய மாமுனி

அன்னை மீனாட்சி வேண்டுகோளின்‌

அர்த்தத்தை மற்ற மாமுனிகளுக்கு

எடுத்துரைக்கிறார்‌.

“முதல்‌ உயிர்‌ இவ்வுலகத்தில்‌

தோன்றியது கடக ராசியில்‌ தான்‌ !

எனவே தாயாகி வீற்றிருக்கின்ற.

அன்னை மீனாட்சி அமர்கின்ற வீதியை,

அம்பாளின்‌ சொரூபமாக இருக்கின்ற.

சந்திரன்‌ ஆட்சி பெறும்‌ கடக ராசியில்‌,

சூரியன்‌ அமரும்‌ மாதமான, ஆடி

மாதத்தை அன்னை ஆடி வீதியாக

கேட்டிருக்கிறாள்‌.


அதுமட்டுமல்ல, சிவபெருமானின்‌

அம்சமாக சூரியன்‌ வலிமை பெறும்‌

மாதங்களான “சித்திரை, ஆவணி, மாசி

வீதியையும்‌” இறைவி கேட்டிருக்கிறாள்‌”


உலகத்தில்‌ வாழுகின்ற உயிர்கள்‌

எல்லாம்‌ சூரிய சந்திரர்களின்‌

கருணையால்‌ வாழ்ந்து வருகிறது

என்பதை எடுத்துரைக்கும்‌ விதத்தில்‌

அன்னை மீனாட்சி இவ்வீதிகளை

அமைத்திருக்கிறார்‌” அன்னை மீனாட்சி

தொடர்கிறாள்‌.


இப்பூமியில்‌ படைக்கப்பட்ட உயிர்கள்‌

யாவையும்‌ இறைவனின்‌

திருப்பாதங்களில்‌ வந்து சரணடைய

வேண்டும்‌. அதற்கு அவ்வுயிர்‌

களங்கமற்று வாழவேண்டும்‌.


 அப்படி வாழும்‌ பட்சத்தில்‌, அண்ட

வெளியாக இருக்கின்ற

சிவபெருமானோடு கலக்க இயலும்‌

என்பதை குறிக்கும்‌ வகையில்‌, அடுத்த

வீதி எவளி வீதி ஆக அமைக்க

வேண்டும்‌ என்று கூறுகிறாள்‌.


மேலும்‌, இம்மாதங்கள்‌

அனைத்திலும்‌ இறைவனை வழிபடும்‌.

வகையில்‌ விழாக்கள்‌ ஏற்படுத்த

வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறாள்‌.

இறைவன்‌, இம்மாதங்கள்‌ மட்டுமல்ல

தேவி, அனைத்து நாட்களும்‌ நீ ஆட்சி

செய்யும்‌ மதுரையம்பதியில்‌ விழாவாக

கொண்டாடப்படும்‌. (இறைவனின்‌

ஆணைப்படி இன்று வரை மீனாட்சி

சுந்தரேஸ்வரர்கள்‌ திருக்கோயிலில்‌ 365

நாட்களும்‌ விழா

கொண்டாடப்படுகிறதூ.


“அன்னை மீனாட்சி, பச்சை மரக

நிலையில்‌ இருந்து அருள்பாலிப்பதால்‌,

பசுமையையும்‌, இளமையையும்‌.

திறமையையும்‌ கொண்டிருக்கின்ற

பச்சை நிறத்தை ஆளும்‌ புதனின்‌

நகரமாக இது அழைக்கப்படும்‌ என்று

அறிவிக்கிறார்‌ இறைவன்‌.


இதன்படி இறைவனின்‌

திருவுள்ளத்தின்‌ படி மதுரை புதன்‌

நகரமாகவும்‌, ஜோதிட நகரமாகவும்‌

அழைக்கப்படுகிறது. நான்கு வேதங்கள்‌,

நான்மாட வீதிகளாக இருந்து மதுரை

மாநகரத்தை, காக்கின்றன. மதுரை

மாநகரத்தில்‌ ஆட்சி செய்யும்‌ அன்னை

மீனாட்சி, சொக்கநாதரின்‌ பேரருள்‌

துணை கொண்டு தமிழுக்கும்‌ தமிழ்‌

கூறும்‌ நல்‌ உலகத்தையும்‌ பேணி

பாதுகாக்கிறார்‌.





Post a Comment

0 Comments