சீதையின் வரமும் ! ராதையின் பெயரும் !

 


 கிருஷ்ண பகவானுக்கு, பாமா-ருக்மணி என

மனைவியர்இருந்தும்‌, நாம்அனைவரும்

ராதா கிருஷ்ணா என்றே கொண்டாடிக்

கொண்டிருக்கிறோம்‌. பாமா கிருஷ்ணா என்றோ

ருக்மணி கிருஷ்ணா என்றோ ஏன்

சொல்வதில்லை? மனைவியரை விட்டு விட்டூ

ராதா கிருஷ்ணா என்று காதலியை கொண்டாடிக்

கொண்டிருக்கிறதே இவ்வுலகம்‌ !

 இக்கேள்வி நம்மில்அனைவரும்மனதில்

நிறைந்திருக்கும்‌. இக்கேள்விக்கான பதிலை.

சிறு நிகழ்வு மூலம்அறிந்து கொள்ளலாம்‌.

 

உலக நன்மைக்காக நடைபெற்ற இராம

அவதாரம்நிறைவு பெற்றுவிட்டது. சீதையும்‌,

இராமரும்வைகுண்டம்திரும்பினர்‌. பாற்கடலில்

ஒரு நாள்ஸ்ரீ மஹாவிஷ்ணு, லக்ஷ்மி

தேவியிடம்இராம அவதாரத்தில்உனக்கு

மிகுந்த துன்பத்தை அளித்து விட்டேன்‌. உன்

கவலைகள்நீங்க வரம்தர இசைந்துள்ளேன்‌.

என்ன வரம்வேண்டும்‌? கேள்என்றார்‌.

 

அதை கேட்ட மஹாலக்ஷ்மி, 'பிரபு, இராம

அவதாரத்தில்அதிக நாட்கள்உங்களை பிரிய

நேரிட்டது . இனி நிகழவிருக்கின்ற அவதாரத்தில்‌,

என்சிந்தையில்இருந்து நீங்களும்‌, உங்கள்

சிந்தையிலிருந்து நானும்சிறிதும்

விலகாதபடியும்‌, எல்லா நேரமும்என்னை

பற்றிய நினைவில்நீங்களும்‌, நானும்

'தியானித்தீருக்க செய்யுங்கள்‌.

 

உங்கள்மனைவியாக இல்லாமல்‌,

காதலியாக அவதரிக்க அருள்புரிய வேண்டும்

நம்காதலை உலகமே கொண்டாட வேண்டும்‌,

எத்தனை பேர்உங்களுக்கு சாந்தம்

கொண்டாடினாலும்உலகம்நம்இருவருடைய

பெயர்களேயே உச்சரிக்க வேண்டும்என

வேண்டினாள்‌.

 

இதைக்கேட்ட மஹாவிஷ்ணு வியப்பாக,

மனைவியாக வேண்டும்என்று தான்

விரும்புவார்கள்‌.

 

 ஆனால்நீயோ காதலியாக வரவேண்டும்

என்கிறாயே ?'என்று புன்னகைத்தார்‌.

இராம அவதாரத்தில்உங்களை பிரிந்தது

போல, இனி நினைவாலும்உங்களை பிரியக்

கூடாது ! எனவே உங்கள்காதலியாகவே நான்

அவதரிக்க வேண்டும்‌. நம்உறவினை

இவ்வுலகம்காண்டாட வேண்டும்பிரபு' என்றார்

மஹாலக்ஷ்மி.

 

அவ்வாறே ஆகட்டும்‌ !' என்று,

வரமருளினார்மகா விஷ்ணு.

 

சரி, காதலியாக அவதரிக்க வேண்டும்என்ற

வரத்தினை பற்று விட்டாய்‌. அவதாரத்தின்

பயரினையும்நீயே சொல்லிவிடுூ' என்றார்

மஹாவிஷ்ணு.

 

அடுத்த கணமே ' மிக்க மகிழ்ச்சி பிரபு !

எசன்ற அவதாரத்தில்‌, நம்மை 'சீதாராமன்‌'

என்றே அனைவரும்அழைத்தனர்‌. 'ராமன்சீதா:

என்று ஒருவரும்அழைத்ததில்லை. எனக்கு

அதில்சற்றே மனக்குறை. அடுத்த அவதாரத்தில்

உங்கள்ஒபயரினை தொடர்ந்து,என்பபயர்

இடம்பற்றால்அக்குறை தீரும்‌' என்றார்

மகாலக்ஷ்மி.

 

அவரின்பேரன்பில்நகிழ்ந்த

மஹாவிஷ்ணு, : உன்அன்பினால்

மனமகிழ்ந்தேன்தேவி ! ராம அவதாரத்தின்

பெயரிலிருந்து 'ரா' முன்னழுத்தாகவும்‌, சீதா

பெயரிலிருந்து 'தா' பின்னமுத்தாகவும்

'இணைந்து 'ராதா' என அழைக்கப்படுவாய்‌'

என்று வரமருளினார்‌.

 

ராதா கிருஷ்ணா ! ராதா கிருஷ்ணா !


Post a Comment

0 Comments