கேள்வி - பதில்

 


விநாயகர்சதுர்த்தி மற்றும்சங்கடகர

சதுர்த்தியின்சிறப்பு பற்றி

அறியவேண்டும்குருவே?

 

கவிதா மதுரை

 

சந்திரன்சுந்தரன்‌, அழகின்

அம்சமாக திகழ்பவன்‌. அவனுக்கு

சற்று தான்அழகு என்ற கர்வம்

மேலோங்கி இருந்தது. தேவர்களோடு

தன்னை ஒப்பிட்டு தன்னுடைய

அழகின்மேன்மையை பறைசாற்றி

கொள்வான்சந்திரன்‌. இவனுக்கு

பாடம்கற்பிக்க முடிவெடுத்தார்

விநாயகப்பெருமான்‌.

 

ஒருமுறை

தேவலோகத்தில்தேவர்கள்

அனைவரும்கூடி

இருக்கக்கூடிய வேளையில்‌,

விநாயகருடைய

தோற்றத்தோடு தம்

தோற்றத்தையும்ஒப்பிட்டு

விநாயகரை பார்த்து

இளக்காரமாக நகைத்தான்

சந்திரன்‌.

 

காத்திருந்த விநாயகப்பெருமான்‌.

இதுதான்சரியான வேளையென்று,

தோற்றத்தை வைத்து எடை போடும்

சந்திரா. இனி உன்தோற்றத்தை எவர்

ஏறிட்டு பார்த்தாலும்அவர்களுக்கு

களங்கம்வந்து சேரும்என்று

சாபமிட்டார்‌.

 

சந்திரனோடு உறவு

கொண்டவர்கள்எல்லாம்விலகி

ஓடினர்‌. மக்கள்சந்திரனை பார்க்க

அஞ்சினர்வெறுத்தனர்விலகினர்‌.

 

சந்திரனுக்கு தன்னுடைய தவறு

புரிந்தது, இச்சாபத்தில்இருந்து

தன்னை விடுவிக்கும்படி

மன்றாடினான்‌. விநாயகரை

பூஜித்தான்‌.

 

ஆவணி வளர்பிறை சதுர்த்திக்கு

முன்னால்வருகின்ற தேய்பிறை

சதுர்த்தியன்று விநாயகரை பூஜிக்க

ஆரம்பித்தான்‌.

 

சந்திரன்மனோகாரகன்அல்லவா,

மனதை அடக்கி, ஒடுக்கி விநாயகர்

மீது கவனம்வைத்து முழுமையாக

விநாயகரைத்தொழுதான்‌, மனம்

திருந்தி அவன்செய்கின்ற பூஜையை

விநாயகர்ஏற்றுக்கொண்டார்‌. ஆவணி

மாதம்வளர்பிறை சதுர்த்தி அன்று

சந்திரனுக்கு சாப விமோசனம்

அளித்தார்‌.

சந்திரன்மகிழ்ந்தான்அழுதான்

ஆனந்தக்கண்ணீர்விட்டான்‌.

தன்னுடைய தவறை அறிந்து மனம்

வருந்தினான்‌. விநாயகரின்பாதம்

தொழுதான்‌. சந்திரன்பூஜை

தொடங்கிய தேய்பிறை

சதுர்த்தி, சந்திரனின்

சங்கடங்களை போக்கிய

காரணத்தால்அந்நாளை

சங்கடஹர சதுர்த்தியாக

வழிபடுகிறோம்‌.

சாப விமோசனம்பெற்ற

ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாளை

விநாயகர்சதுர்த்தியாக கொண்டாடி

மகிழ்கிறோம்‌.

சந்திரன்விநாயகர்முன்சங்கல்பம்

செய்தான்‌, எவரொருவர்ஒவ்வொரு

மாதமும்தேய்பிறை சதுர்த்தி ஆன

சங்கடகர சதுர்த்தியன்று விநாயகரை

தொழுகிறார்களோ அவர்களுக்கு மன

உறுதியையும்‌, உடல்

ஆரோக்கியத்தையும்அளிப்பதோடு

அவர்களது சங்கடங்கள்தீர்ப்பேன்

என விநாயகர்முன்சபதம்செய்தார்‌.

விநாயகர்அகமகிழ்ந்து சந்திரனை

தனது சிகையில்அணிந்து

மகிழ்வித்தார்‌. சந்திரனை தனது

சிகையில்அணிந்து முக்கண்

கொண்டு காட்சி தரும்விநாயகரை

தான்நாம்‌. ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்என

அழைக்கிறோம்‌.

நாமும்சங்கடஹர சதுர்த்தியன்று

 

விநாயகரை தொழுது நமது

சங்கடங்களை தீர்ப்போம்‌.

Post a Comment

0 Comments